ADDED : ஜன 20, 2024 05:15 AM

சாலை பாதுகாப்பு ஊர்வலம்
திண்டுக்கல்: சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு திண்டுக்கல் போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் எம்.வி.எம்.,கல்லுாரி வரை நடந்தது. ரோடுகளில் ஏற்படும் விபத்துக்களை வாகன ஓட்டிகள் எப்படி தவிர்க்கலாம் எனதுண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினர்.
கைதிகளுக்கு ஆலோசனை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் தமிழ்நாடு மனநல மறுசீரமைப்பு மன்றம் சார்பில் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது. சிறைக்கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் நீதிபதி பாலச்சந்திர குமார்,நிர்வாகிகள் முத்துச்சாமி,செல்வராஜ்,டாக்டர்கள் முருகராஜ்,காமராஜ் பங்கேற்றனர்.
சமத்துவ பொங்கல் விழா
கொடைக்கானல்:கொடைக்கானல் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நகராட்சி தலைவர் செல்லத்துரை தலைமையில் நடந்தது.கமிஷனர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கப்பட்டது.
கல்லுாரியில் பொங்கல் விழா
பழநி : பழனி சின்ன கலைமுத்தூரில் உள்ள பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியில் மாணவியர், பேராசிரியர்கள் இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர். கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கோலாட்டம், கும்மியாட்டம், வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடினர்.