sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்திகள் சில வரிகளில்....

/

செய்திகள் சில வரிகளில்....

செய்திகள் சில வரிகளில்....

செய்திகள் சில வரிகளில்....


ADDED : பிப் 16, 2024 05:59 AM

Google News

ADDED : பிப் 16, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடன் வசதியாக்கல் நாள்

திண்டுக்கல் : தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கடன் வசதியாக்கல் நாள் பிப்.23ல் கடைபிடிக்கபடுகிறது. அதன்படி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அன்று மதியம் 3 :00மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுயதொழில் கடன் திட்டங்களில் விண்ணப்பித்து வங்கிகளில் பரிசீலனையில் உள்ளவர்களுக்கு கடன் ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட உள்ளது. அதோடு மக்களுடன் முதல்வர் திட்டத்தில் விண்ணப்பித்திருப்போர்களுக்கு கடன் ஒப்பளிப்பு, கடன் பட்டுவாடா நடக்கிறது.

காங்.,ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: பா.ஜ.,அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகர காங்.,சார்பில் மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது, மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை,குப்புசாமி,மாவட்ட துணைத்தலைவர்கள் கார்த்திக்,பாரதி,அப்துல்ரகுமான்,பகுதி செயலாளர்கள் உதயகுமார்,அப்பாஸ்மந்திரி,நாகலட்சுமி,ஒன்றிய செயலாளர்கள் மதுரை வீரன்,பாலா,மாவட்ட இளைஞர் காங்.,தலைவர் முகமது அலியார் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டிற்கு அழைப்பு

திண்டுக்கல் : தவசிமேடையில் பிப்., 18 ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் , காளைகளின் உரிமையாளர்கள் https://dindigul.nic.in என்றஇணையதளம் மூலம் இன்று (பிப். 16) தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், முதலானவற்றை பதிவேற்றம் செய்திட வேண்டும். இதேபோல் காளைகளுக்கான பதிவுகளையும் பதிவேற்றிட வேண்டும். டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்டுவர். தகுதி விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச் சீட்டு ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படும்.

அரசு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வேடசந்துார் : தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ,உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேடசந்துார் ஆத்துமேட்டில் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வடமதுரை வட்டார செயலாளர் யவணக்கண்ணன், குஜிலியம்பாறை வட்டார செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் துணைத் தலைவர் கார்த்திகேயன் பேசினார்.

திட்ட இயக்குனர் ஆய்வு

செம்பட்டி : ஆத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கோழிப்பண்ணை விலக்கு நால்ரோடு சந்திப்பில் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இறுதி கட்டடத்தில் உள்ளது. இந்தபணிகளை திட்ட இயக்குனர் திலகவதி ஆய்வு செய்தார். ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், பி.டி.ஓ., தட்சிணாமூர்த்தி உடன் இருந்தனர்.

ஆண்டு விழா

பழநி : பழநி இடும்பன் கோயில் சாலையில் உள்ள கார்த்திக் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 24 ம் ஆண்டு விழா நடைபெற்றது. பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரி பேராசிரியர் ஸ்ரீ ராஜா பேசினார். பள்ளி தாளாளர் குப்புசாமி, முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us