ADDED : பிப் 21, 2024 05:50 AM
உதவித்தொகைக்கு அழைப்பு
திண்டுக்கல் : ஹவில்தார் வரை தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் , அவர்களை சாந்தோர்களின் சிறார்கள் 2024--2025-ம் கல்வியாண்டிற்கான மத்திய அரசின் ரக் ஷா மந்திரி விருப்புரிமை நிதி கல்விஉதவித்தொகை பெறலாம். இது தொடர்பாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்ச்சி பெற்றவர்களும்,இளங்கலை பயிலுவோர் பயன்பெறும் வகையில் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் . இதன் விபரங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் : மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் , உதவிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆடி கலைஞர்கள் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 2 நாட்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.
தாலுகா அலுவலகம் முற்றுகை
திண்டுக்கல் : ஜின்னாநகர்,யூசுபியநகர்,பிஸ்மிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் குடிமனைபட்டா வழங்ககோரி திண்டுக்கல் மேற்கு மேற்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ.,பாலபாரதி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பீமாராவ் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் அரபுமுகமது, மாவட்ட துணைச்செயலாளர் முகமது அனிபா,13வது வார்டு சி.பி.எம்., ஒன்றிய கவுன்சிலர் ஜீவாநந்தினி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆஸாத் பங்கேற்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இடம் தேர்வு செய்து பட்டா வழங்கப்படும் என உறுதியளிக்க போராட்டம் கைவிடப்பட்டது.
சந்து மாரியம்மன் திருவிழா
சின்னாளபட்டி : காமாட்சி நகரில் உள்ள சந்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பிருந்தாவன தோப்பில் இருந்து முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலமாக எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு , பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

