/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்லுாரி பணிக்கு திரும்பிய நிகிதா
/
கல்லுாரி பணிக்கு திரும்பிய நிகிதா
ADDED : ஜூலை 08, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் நகை மாயம் குறித்து  போலீசிடம்  கூறிய   பேராசிரியர் நிகிதா நேற்று முதல் திண்டுக்கல் கல்லுாரி பணிக்கு திரும்பினார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் நகை திருடியதாக பேராசிரியர் நிகிதா  புகார் அளித்தார். போலீசார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார். இதில் தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
புகார் கொடுத்த நிகிதா  திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கல்லுாரியில் தாவரவியல் துறை தலைவராக  உள்ளார்.   மருத்துவ விடுப்பில் இருந்த இவர்  நேற்று  பணியில்  சேர்ந்தார்.

