/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிபா வைரஸ் எதிரொலி; சுகாதார நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
/
நிபா வைரஸ் எதிரொலி; சுகாதார நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
நிபா வைரஸ் எதிரொலி; சுகாதார நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
நிபா வைரஸ் எதிரொலி; சுகாதார நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
ADDED : செப் 19, 2024 05:10 AM
திண்டுக்கல்: 'நிபா வைரஸ்' அறிகுறியுடன் வெளியூரை சேர்ந்தவர்கள் யாராவது வருகிறார்களா என ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் சில நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் 'நிபா வைரஸ்' காரணமாக பலியானார். அதன் தொடர்ச்சியாக கேரளா முழுவதும் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
கேரள எல்லைகளில் உள்ள தமிழக பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட எல்லைகளில் முகாம்கள் அமைத்து வெளி மாநிலங்களிலிருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மாவட்ட எல்லையிலே சம்பந்தபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்,பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகின்றனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல்,தலை வலி,உடல் வலி போன்ற 'நிபா வைரஸின்'அறிகுறிகளோடு அனுமதியாகி சிகிச்சை பெற்றால் முழுவிபரங்களை தெரிவிக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் யாருக்கும் பாதிப்புகள் இல்லாத நிலையில் கண்காணிக்கும் பணி தொடர்வதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.