தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பண்டிகை நாட்களில் பஸ்களின்றி பரிதவிப்பு

பண்டிகை நாட்களில் பஸ்களின்றி பரிதவிப்பு

பண்டிகை நாட்களில் பஸ்களின்றி பரிதவிப்பு


UPDATED : நவ 13, 2026 10:45 PM

ADDED : நவ 13, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 10:45 PM ADDED : நவ 13, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: பண்டிகை நாட்களில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோவைக்கு செல்ல வசதியாக கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோவைக்கு செல்லும் மாணவ, மாணவிகள், ஐ.டி., ஊழியர்கள், மருத்துவமனை, பிற அலுவல்களுக்கு செல்வோர் திண்டுக்கல், மதுரை, தேனி வழித்தடங்களில் இருந்து வரும் பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது.

பண்டிகை நாட்களில் ஒட்டன்சத்திரம் வருவதற்கு முன்பே பஸ்களில் கூட்டம் அதிகமாகி விடுகிறது. இதனால் இங்கிருந்து பயணிப்போர் பஸ்களில் நின்று கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கோவை – மதுரை பஸ்களில் இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளை பஸ் புறப்படும் போது ஏறிக்கொள்ளுங்கள் எனக்கூறி உட்கார அனுமதி மறுக்கின்றனர்.

இதனால் பண்டிகை விடுமுறைக்கு கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரும் கல்லுாரி மாணவ, மாணவிகள், திருப்பூர் கம்பெனிகளில் இருந்து வரும் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சமீபத்தில் தீபாவளி நேரத்தில் ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் வெளியூர் செல்லவும், அங்கிருந்து வருவதற்கும் சிரமப்படும் நிலை இருந்தது.

எனவே பண்டிகை நாட்களில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கோவை, திருப்பூருக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us