/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டில்லி செல்லும் திட்டம் இல்லை: பன்னீர்செல்வம்
/
டில்லி செல்லும் திட்டம் இல்லை: பன்னீர்செல்வம்
ADDED : செப் 15, 2025 01:58 AM
திண்டுக்கல்:'' நான் டில்லி செல்லும் பயணத்திட்டம் தற்போது இல்லை''என, திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,வை ஒன்றிணைப்பது குறித்து செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார். இதுதொடர்பாக நான் விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து தினகரன், செங்கோட்டையனையும் சந்திப்பேன். நடிகர் விஜய் பிரசாரத்தில் மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு வெளியாகவில்லை. அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும்.
அப்போது எதுவும் நடக்கலாம். ஆனால் நல்லதாகவே நடக்கும். செங்கோட்டையன் டில்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசியுள்ளார்.
அவரை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.
நான் டில்லி செல்லும் பயணத்திட்டம் தற்போது இல்லை. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 2 நாட்களுக்கு முன் என்னுடன் அலைபேசியில் பேசினார்.
இருவரின் சந்திப்பை பற்றி விவாதித்தோம். உறுதியாக சந்திப்போம் எனக் கூறினேன். வரவுள்ள சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமியை மாற்றினால் கூட்டணியை விட்டு வெளியேறியே அனைவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது. தினகரன் நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.