/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இல்லவே இல்லை ரோடுகள்....அச்சுறுத்தும் தெரு நாய்கள்... அல்லல்படும் பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகர் குடியிருப்போர்

ADDED : ஜன 29, 2025 05:17 AM
திண்டுக்கல், : 10 ஆண்டுகளுக்கு மேலாக இல்லை ரோடுகள் , கழிவுநீர் செல்ல சாக்கடை இல்லாமல் ரோடுகளில் தேங்கும் கழிவுநீர், மழை நேரங்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர், எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள், மாடுகள்,நாய்கள்,கடித்து குதறும் கொசுக்கள் என ஏராளமான பிரச்னைகளில் பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகரை சுற்றிய மக்கள் உள்ளனர்.
திண்டுக்கல் மாலப்பட்டி ரோடு பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜாகிர், செயலாளர் பிரபாத், பொருளாளர் சஞ்சய், நிர்வாகிகள் விமலா, ஸ்டெல்லா மேரி கூறியதாவது: திண்டுக்கல் மாலப்பட்டி ரோடு சாத்தப்பன் நகர், மஹா லட்சுமி நகர், ஐஸ்வர்யா நகர், திருமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ரோடுகள் இல்லை. களிமண் ரோடுகள் உள்ள நிலையில் மழை நேரங்களில் மக்கள் செல்ல முடியாமல் சகதியில் தடுமாறி விழுகின்றனர். டூவீலர்களில் செல்வோரும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் இதுவரை சிமென்ட், தார் ரோடுகள் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவசர தேவைக்கு கூட இங்குள்ள மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்குகின்றனர். சிலர் மது குடிப்பது, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது என சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் கேட்டால் தகராறு தான் ஏற்படுகிறது. போலீஸ் ஸ்டேஷன்களிலும் இதுகுறித்து பல்வேறு புகார்களை கொடுத்து விட்டோம் அவர்களும் எப்போதாவது ஓருமுறை வந்து ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். மற்ற நேரங்களில் வருவதே இல்லை. எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. வெறி பிடித்து கடிக்கின்றன. பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் புகார் கொடுத்த போதிலும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். மழை நேரங்களில் மழைநீர், கழிவுநீர் செல்ல சாக்கடை இல்லாமல் ரோடுகளில் மழைநீர் தேங்கி மக்களை பாடாய்படுத்துகிறது. மாடுகளும் ஆங்காங்கே சுற்றிதிரிகின்றன என்றார்.