/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இல்லவே இல்லை ரோடுகள்; குத்தாட்டம் போடும் கொசுக்கள்; தவியாய் தவிக்கும் கே.ஆர்.நகர் குடியிருப்போர்
/
இல்லவே இல்லை ரோடுகள்; குத்தாட்டம் போடும் கொசுக்கள்; தவியாய் தவிக்கும் கே.ஆர்.நகர் குடியிருப்போர்
இல்லவே இல்லை ரோடுகள்; குத்தாட்டம் போடும் கொசுக்கள்; தவியாய் தவிக்கும் கே.ஆர்.நகர் குடியிருப்போர்
இல்லவே இல்லை ரோடுகள்; குத்தாட்டம் போடும் கொசுக்கள்; தவியாய் தவிக்கும் கே.ஆர்.நகர் குடியிருப்போர்
ADDED : ஜன 14, 2025 10:54 PM

திண்டுக்கல்; ஆண்டுகளை கடந்தும் போடப்படாத ரோடுகள்,இல்லாத சாக்கடைகள், மழை நேரங்களில் மண் சகதியில் தடுமாறும் வாகன ஓட்டிகள், குதறும் கொசுக்கள் என பிரச்னைகளின் பிடியில் தத்தளிக்கின்றனர் திண்டுக்கல் திருச்சிரோடு கே.ஆர்.நகர் மக்கள்.
திண்டுக்கல் திருச்சி ரோடு கே.ஆர்.நகர் குடியிருப்போர் நலச்சங்க பொருளாளர் பழனிசெல்வம், உறுப்பினர்கள் கமலா, நதியா, காஞ்சனா, தனபாக்கியம், விஜயலட்சுமி, மலர்விழி, ராஜேஸ்வரி கூறியதாவது: கே.ஆர்.நகரில் 1 முதல் 10 தெருக்களை கொண்ட இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ரோடுகள் இல்லாமல் மண் தரையாக உள்ளது. பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள பகுதிகளில் ரோடுகளை சீரமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இது ஒருபுறம் இருக்க கழிவுநீர் வெளியில் செல்வதற்கு முறையான சாக்கடைகள் இல்லை. இதனால் மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்கின்றன. இதுமட்டுமில்லாமல் இங்குள்ள மண் ரோடுகள் மழைநீரால் சகதியாக மாறபொது மக்கள் தடுமாறுகின்றனர். எண்ண முடியாத அளவிற்கு தெரு நாய்கள் சுற்றித்திரிந்து மக்களை கடிக்கின்றன. இவைகள் இரவில் துரத்துவதால் பெண்கள் வீட்டிற்குள் முடங்குகின்றனர். இதை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்து விட்டோம். அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.2 மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. வரி மட்டும் மாதா மாதம் வசூலிக்கின்றனர்.
இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தினர் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காது மெத்தனமாக உள்ளனர். கழிவுநீர் பல இடங்களில் தேங்க கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. இதன்மூலம் தொற்று பரவும் வாய்ப்பு அதிகளவில் உள்ளன. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. ஊராட்சி நிர்வாகத்தினர் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.