/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளிகளில் இல்லை துாய்மை பணியாளர்கள் ; கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் சுணக்கம்

ADDED : ஜூன் 29, 2024 05:38 AM

கொரோனாவிற்கு பிறகு அரசு பள்ளிகளில் கிடைக்கும் உதவிகள் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப கட்டமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த கல்வி ஆண்டிலும் பல அரசு தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிய வகுப்பறை, கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிய கட்டமைப்பிற்கு ஏற்ப பள்ளிகளை துாய்மை செய்வதற்கும், கழிப்பறை சுத்தம் செய்வதற்கும், காவல் பணிக்கும் பணியாளர்கள் இல்லாததால் பள்ளியில் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் பள்ளியை மதுபான கூடமாக மாற்றும் அவலமும் நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலைமை மோசமாகி வருகிறது. காவல் பணிக்கு ஆள் இல்லாதது முக்கிய காரணமாகும். இதற்கு ஒத்துழைக்காவிட்டாலும் மாற்று வழியை கண்டுபிடித்து துாய்மை பணியாளர்கள், காவலர்களை நியமிக்க வேண்டும்.