/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடை இல்லை; சேதமான மின்கம்பங்கள் காவேரியம்மாபட்டி ஊராட்சியில் தொடரும் சிரமம்
/
சாக்கடை இல்லை; சேதமான மின்கம்பங்கள் காவேரியம்மாபட்டி ஊராட்சியில் தொடரும் சிரமம்
சாக்கடை இல்லை; சேதமான மின்கம்பங்கள் காவேரியம்மாபட்டி ஊராட்சியில் தொடரும் சிரமம்
சாக்கடை இல்லை; சேதமான மின்கம்பங்கள் காவேரியம்மாபட்டி ஊராட்சியில் தொடரும் சிரமம்
ADDED : ஜூலை 24, 2025 04:35 AM

ஒட்டன்சத்திரம் : சாக்கடை வசதி இல்லை, சேதம் அடைந்த மின்கம்பங்களால் ஆபத்து என காவேரியம்மாபட்டி ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள இந்த ஊராட்சியில் காவேரியம்மாபட்டி, குரும்பபட்டி, ராயகவுண்டன்புதுார், இறையகவுண்டன்புதுார், அணைப்பட்டி , அத்தப்ப கவுண்டன்புதுார் ஆகிய கிராமங்கள் உள்ளன. அத்தப்ப கவுண்டன் புதுார் கிராமத்தில் சாக்கடை வசதி இன்றி உள்ளது. இது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதனை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைப்பட்டி, அத்தப்ப கவுண்டன்புதூரில் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. காவேரியம்மாபட்டி கரட்டுப் பகுதியில் சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் ரோடுகள் பாதியுடன் நிற்கிறது. காவேரியம்மாபட்டியில் பெரியகுளம் உள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு தண்ணீரை சேமிக்க போதுமான வசதிகள் இல்லை. தரைமட்ட தொட்டி , நீர் வரத்து கால்வாய்களில் கூடுதல் தடுப்பணை இங்கு அவசியமாகிறது.
குரும்பபட்டி, அணைபட்டியில் பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியே கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. ஊராட்சி பகுதிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்வாயை சீரமையுங்க பழனிமுத்து, விவசாயி: பெருமாள்குளத்தில் இருந்து ஒட்டக்குளம், பாப்பான்குளம் வரும் நீர் வழிப் பாதையில் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும். தண்ணீர் வீணாகாமல் இருக்க கரை பகுதிகளை சிமென்டால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை இல்லாததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். விவசாயிகளின் விளை பொருட்களை உலர வைக்க உலர்களம் தேவையாகிறது.
சாக்கடை வசதி தேவை ஹரிஹரன், அ.தி.மு.க., நிர்வாகி, காவேரியம்மாபட்டி: அத்தப்ப கவுண்டன் புதுார் கிராமத்தில் சாக்கடை வசதி இல்லை. அணைப்பட்டி கிராமத்தில் சேதம் அடைந்த மின் கம்பம் பல மாதங்களாக மாற்றப்படாமல் உள்ளது. நால் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோட்டிற்கு செல்லும் தார் ரோட்டை சீரமைக்க வேண்டும். நால்ரோடு பகுதியில் மழைக்காலத்தில் மழை நீர் தேங்குவதால் இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
சீரான முறையில் குடிநீர் வழங்க கூடுதலாக குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும்.