/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மைதானம் இல்லை... சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்னைகள் பிடியில் திண்டுக்கல் 40வது வார்டு மக்கள்
/
மைதானம் இல்லை... சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்னைகள் பிடியில் திண்டுக்கல் 40வது வார்டு மக்கள்
மைதானம் இல்லை... சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்னைகள் பிடியில் திண்டுக்கல் 40வது வார்டு மக்கள்
மைதானம் இல்லை... சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்னைகள் பிடியில் திண்டுக்கல் 40வது வார்டு மக்கள்
ADDED : ஆக 24, 2025 03:40 AM

திண்டுக்கல்: மைதானம் இல்லை, சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் என திண்டுக்கல் மாநகராட்சி 40 வது வார்டில் பிரச்னைகள் கொடி கட்டி பறக்கின்றன.
மாநகராட்சி 40 வது வார்டில் கண்டுகொள்ளப்படாத சாக்கடை பணிகள், வாறுகால், சாலை வசதிகள், ஆக்கிரமிப்பு என மக்கள் பிரச்னைகளை அடுக்குகிறார்கள். கழிவுநீர் வாறுகால் கட்டிக்கொடுப்பதாக 3 ஆண்டுகளாக சொல்கிறார்கள் ஆன நடவடிக்கை எடுத்தபாடில்லை.
சீரான குடிநீர் வினியோகம் இல்லை, சாலை வசதி இல்லை. சாலையோர ஆக்கிரமிப்பால் பாதசாரிகள்,வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. திண்டுக்கல் வத்தலகுண்டு ரோட்டில் முத்தாலம்மன் கோயில் தெரு, கரீம் நகர், ஈஸ்பியா நகர்,பாவாஷா தெரு என முக்கிய பகுதிகளை கொண்ட இந்த வார்டில் சாக்கடை, சாலை பிரச்னைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதுதவிர மெயின் ரோட்டில் சாலையை ஆக்கிரமித்திருக்கும் வாகனங்கள், டூவீலர்களால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. சுற்றுப்பகுதியில் எங்குமே பள்ளி, கல்லுாரி பயிலும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்பாட்டுகென்று பொது விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் நடைபயிற்சி மேற்கொள்வோரும், மாணவர்களும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
முறையிட்டும் எந்த பலனும் இல்லை அசோக், கிழக்கு மாவட்ட பா.ஜ.,மீனவர் பிரிவு, துணைத்தலைவர்: சாக்கடை துார்வாருவதே இல்லை. மண் நிரம்பி உள்ளது. முக்கிய சாலையான வத்தலகுண்டு ரோட்டில் வடிகால் வசதி இல்லாததால் பிளாஸ்டிக் குப்பை , காலி வாட்டர் பாட்டில்கள் என எல்லாம் சாக்கடைக்குள் கொட்டப்பட்டு அடைப்பட்டு கிடக்கிறது.
சாக்கடை கட்டி தருவதாக கூறினார்கள். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு முடிந்தும் இதுவரை அதற்காக சின்ன பணிகளை கூட துவங்கவில்லை. மழைக்காலங்களில் தெருக்களில் பெருக்கெடுக்கும் மழைநீர் சாக்கடை வழியே இங்குவந்துதான் கலக்கிறது.
நெடுஞ்சாலையில் வழிந்தோடும் நீரும் இங்கு வருவதால் ஓடை நிரம்பி கழிவுநீர் சாலையில் பாய்ந்தோடுகிறது. தெருக்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம், சுகாதாரம் பேண அதிகாரிகள் ,கவுன்சிலரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
நடவடிக்கை இல்லை பிரவீன், அம்மன் கோவில் தெரு: சாலையோர ஆக்கிரமிப்புகள் இங்குள்ள மக்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.ரோட்டில் சகட்டுமேனிக்கு நிறுத்தப்படும் டூவீலர்கள், ஆக்கிரமிப்பு இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளால் போக்குவரத்து , நடைபாதைக்கு இடையூறு ஏற்படுகிறது. டூவீலர் விபத்துக்கள் இங்கு அடிக்கடி நடக்கின்றன.
கரீம் நகர், முத்தாலம்மன் கோயில் தெரு, ஈஸ்பியா நகர் பகுதிகளில் சாக்கடை கட்டவில்லை. வார்டு மக்கள் பயன்பாட்டுக்கும், மாணவர்கள் பயன்பாட்டுக்கும் பொது விளையாட்டு மைதானம் இல்லை.
இதனால் திறமையான இளைஞர்கள் பயிற்சிக்காக கட்டண பயிற்சி மையங்களுக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுங்கள், விளையாட்டு மைதானம் அமைத்து தாருங்கள்என எத்தனையோ முறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஹசீனா பர்வீன், கவுன்சிலர் (தி.மு.க.,): சாக்கடை பணிகள் நிறைவேறாத இடங்களில் பணிகள் துவங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு காரணமாக தாமதமாகிறது. வார்டில் பிரச்னைகள் உள்ள இடங்களை கண்டறிந்து உடனடி தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கன்வாடி, சாலை வசதி, சிறு பாலம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
வத்தலகுண்டு மெயின்ரோட்டில் வாறுகால் கட்ட முடியாததற்கு காரணம் அது நெடுஞ்சாலை துறை வரம்புக்குள் வருகிறது. அதுவும் நிதி பிரச்னையால் தடைப்பட்டுள்ளது. பொது மைதானம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.