/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூம்பாறையில் செயல்படாத ரேஷன் கடை
/
பூம்பாறையில் செயல்படாத ரேஷன் கடை
ADDED : டிச 18, 2025 06:27 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறை ரேஷன் கடை மதியத்திற்கு பின் சரிவர செயல்படாத நிலை , சுகாதாரக்கேட்டால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
பூம்பாறையில் நகர்பகுதி , கோயில் என இரு ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
இவ்விரு கடைகளுக்கும் ஒரு விற்பனையாளர் உள்ள நிலையில் விற்பனையாளர் சரிவர வருவதில்லை. உள்ளூர்வாசிகள் ரேஷன் பொருட்களை விற்பனை செய்யும் போக்குள்ளது. எடையளவு குறைவாகவும், இஷ்டம் போல் சப்ளை செய்வதாக பொதுமக்களிடையே குற்றசாட்டு எழுந்துள்ளது. மதியத்திற்கு பின் கடைகள் பூட்டப்படும் அவலம் உள்ளது.
கடை வளாக பகுதியை குடிமகன்கள் பாராக பயன்படுத்துவது, இயற்கை உபாதைக்கு பயன்படுத்து என சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கட்டடம் சேதமடைந்து கூரை சேதத்தால் மழைநீர் உட்புகும் சூழல் உள்ளது. பூம்பாறை ரேஷன் கடை முறையாக செயல்படவும், சமூக விரோத செயல்,சுகாதாரக்கேட்டை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

