/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் சாரல் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் சாரல் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் சாரல் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் சாரல் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜன 05, 2024 12:57 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று காலை முதல் நகரை சூழ்ந்த பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நகரில் சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மதியத்திற்கு பின் அடர்ந்த பனி மூட்டத்துடன் எதிரே வரும் நபர்கள் தெரியாத நிலை நிலவியது. நேற்று காலை முதல் பனிச்சாரலுடன் பனிமூட்டம் நிலவிய நிலையில் நகரை மறைத்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.
குளிரை சமாளிக்கும் விதம் பொதுமக்கள் ஸ்வொட்டர் உள்ளிட்ட ஆயத்த ஆடைகளை அணிந்தே நடமாடினர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து சென்றன. முக்கிய சுற்றுலா தலங்களில் பசுமை போர்த்திய இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாது பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். மாலையில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.