sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இதையும் கவனியுங்க

/

இதையும் கவனியுங்க

இதையும் கவனியுங்க

இதையும் கவனியுங்க


ADDED : பிப் 24, 2024 04:10 AM

Google News

ADDED : பிப் 24, 2024 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளாட்களாக மாறும் விவசாய நிலங்கள்

கண்டுகொள்ளாத அதிகாரிகளால் தாராளம்

கொடைக்கானல், பிப்.24

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறும் அவலத்தால் விவசாய பரப்பு சுருங்கி வருகிறது.

கொடைக்கானல், தாண்டிக்குடி , பண்ணைக்காடு உள்ளிட்ட கீழ் மலை, மேல்மலை பகுதி விவசாயத்தை சார்ந்த பகுதிகளாக உள்ளன. சமீபமாக மாறிவரும் சீதோஷ்ண நிலையால் விவசாயம் பாதிப்படைந்து வருகிறது. வனவிலங்குகள் தொந்தரவு என விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி முறைகேடாக பண்ணை நிலம் என்ற போர்வையில் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற நிலை பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளிலும், கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் சர்வசாதாரணமாக கையாளப்படுகிறது. 20 சென்ட் நிலத்திற்கு மேல் இருக்கும் நிலப்பரப்பை பண்ணை நிலங்களாக பதிவு செய்யும் செல்வந்தர்கள் அதில் ஆடம்பர பங்களாக்கள் விடுதிகளை கட்டி வணிக நோக்கிற்கு பயன்படுத்திகின்றனர். இது போன்ற விளைநிலங்களில் பாறைகள் தகர்ப்பு, சோலை மரங்கள் அழிப்பு, கனரக இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை சமப்படுத்துதல் , சிமென்ட் ரோடு அமைத்தல் உள்ளிட்ட அனுமதியற்ற பணி தாரளமாக நடக்கின்றன.

இதை கண்காணிக்க வேண்டிய வருவாய் துறை, பதிவு துறை, வனத்துறை , உள்ளாட்சித் துறை கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கின்றன . இதனால் விவசாய நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது . பண்ணை நிலங்கள் குறித்து கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

................

வெளிச்சத்திற்கு வரும்

விவசாயிகளின் சூழலை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அவற்றை பண்ணை நிலங்களாக விற்கும் போக்கு மலைப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இதனால் பதிவுத்துறைக்கும், வருவாய் துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் முறைகேடாக கனிம வளங்கள் அழிக்கப்படுவதும் மரங்கள் வெட்டப்படுவது உள்ளிட்ட செயல்கள் நடந்துள்ளன. அதிகாரிகள் மலைப்பகுதியில் உள்ள இது போன்ற பிரச்னையை கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

விவேகானந்தன், இயற்கை ஆர்வலர், மன்னவனுார்.






      Dinamalar
      Follow us