/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காலவரையற்ற உண்ணாவிரதம் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு
/
காலவரையற்ற உண்ணாவிரதம் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு
காலவரையற்ற உண்ணாவிரதம் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு
காலவரையற்ற உண்ணாவிரதம் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு
ADDED : செப் 29, 2024 02:31 AM
திண்டுக்கல்:கோரிக்கைகளை நிறைவேற்றகோரி சென்னையில் ஆசிரியர்களை திரட்டி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் இச்சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது :
2021 ம் ஆண்டிற்கு பின்னர் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்கப்படவில்லை. உடனடியாக 1500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியமர்த்திட வேண்டும். பணி மாறுதல் கலந்தாய்வின்போது தேவையான பணியிடங்களை காண்பித்து நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற அக்., முதல் வாரத்தில் முதல்வர் ,அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம்.
இதிலும் தீர்வு ஏற்படவில்லை சென்னையில் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வோம்.
3 ஆண்டு காலமாக எங்களது கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நிறைவேற்றி தருவார்கள் என நம்பி இருந்தோம். இன்னும் 15 நாட்கள் வரை காத்திருப்போம். அதற்குமேல் போராட்டத்தை கையிலெடுப்போம் என்றார்.