ADDED : செப் 13, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: கூவக்காபட்டி ஊராட்சி வெள்ளைய கவுண்டனுார் மெயின் ரோட்டின் இரு புறங்களிலும் 32 வீடுகள், கடைகள் நீண்ட காலமாக உள்ளன.
இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களோ, வீடுகள் ,கடைகளை அகற்றி விட்டால் தங்களுக்கு தங்குவதற்கான தற்காலிக இடம் கூட இல்லை, மழைக்காலம் வேறு வந்து விட்டதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினர்.