ADDED : செப் 05, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: மதுரையை சேர்ந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, சமுதாய அறிவியல் கல்லூரி ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம், வேளாண்மை பெண்கள் திட்டத்தின் கீழ் பழநி ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது.
மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் காஞ்சனா தலைமை வகித்தார்.
விஞ்ஞானிகள் சரவணகுமார், சசிதேவி, சாந்தி, பேராசிரியர் செந்தாமரைசெல்வி, வேளாண்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, வட்டார இயக்க மேலாளர் பிரியா கலந்து கொண்டனர்.