/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிகாரிகள் தொடர் விடுமுறை மக்கள் பணிகள் பாதிப்பு
/
அதிகாரிகள் தொடர் விடுமுறை மக்கள் பணிகள் பாதிப்பு
ADDED : டிச 25, 2024 03:46 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் விடுமுறையை சேர்த்து வைத்து தற்போது மொத்தமாக விடுமுறை எடுத்துள்ளதால் மக்கள் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனவம் செலுத்த வேண்டும்.
பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வாரத்தில் ஒரு நாள் 'வீக்ஆப்',மாதத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படுகிறது.
இதை உள்ளுர்களில் வசிக்கும் சிலர் அந்தந்த நேரங்களில் உடனுக்குடன் எடுத்துகொள்கின்றனர். வெளியூரில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்கள் விடுமுறையை சேர்த்து வைத்து தேவைப்படும் போது மொத்தமாக விடுமுறை எடுக்கின்றனர். அதிலும் ஆண்டின் இறுதி மாதத்தில் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு நேரத்தில் 10 நாட்கள் விடுமுறை எடுக்கின்றனர். உயர் பதவிகளில் இருப்பவர்களை சொல்லவே வேண்டாம்.
தற்போது 2024ல் இறுதி மாதத்தில் இருப்பதால் பல அதிகாரிகள் பல நாட்களாக சேர்த்து வைத்த விடுமுறையை புத்தாண்டு வரை 10 நாட்கள் எடுத்து கொண்டு வெளியூருக்கு சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலும் மக்கள் பிரச்னைகளை சரி செய்யும் துறைகளில் பணியாற்றும் பல மாவட்ட அதிகாரிகள் மொத்தமாக விடுமுறை எடுத்து வெளியூருக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில் பொது மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளை தேடி வருகின்றனர்அவர்கள் இல்லாததால் மன வருத்தத்தோடு திரும்பி செல்லும் நிலை பல அலுவலகங்களில் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏராளமான மக்கள் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

