ADDED : மார் 20, 2025 05:22 AM
பழநி: கிரிவீதியில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் முன் இருந்த மதில் சுவரை அனுமதி இன்றி இடித்தது தொடர்பாக நகராட்சி கவுன்சிலர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்த பேச்சு வார்த்தையில் 800 மீட்டருக்கு புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை கிரிவீதியில் அமைக்க கோயில் நிர்வாகம் இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து நேற்று ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நகராட்சி, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் கிரிவீதியில் குழாய் அமைக்கும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
நகராட்சி மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா, நகராட்சி கமிஷனர் சத்யநாதன், டி.எஸ்.பி., தனஞ்செயன், கோயில் துணை கமிஷனர் லட்சுமி, தாசில்தார் பிரசன்னா கலந்து கொண்டனர்.