/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாடிக்கொம்பு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்
/
தாடிக்கொம்பு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்
தாடிக்கொம்பு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்
தாடிக்கொம்பு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்
ADDED : நவ 23, 2025 03:12 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து பெண், குழந்தை உட்பட 23பேர் காயமடைந்தனர். காயம்பட்டவர்களுக்கு டாக்டர்கள் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு ஆம்னி பஸ் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. இந்த பஸ் திண்டுக்கல் தாடிக்கொம்பு வழியாக நேற்று அதிகாலை 1:30 மணிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது . பஸ்சில் பயணம் செய்தவர்களில் தலா 11 ஆண்கள், பெண்கள், ஒரு குழந்தை என 23 பேர் காயமடைந்தனர். இவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 10 ஆண், 6 பெண், குழந்தை என 17பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். திண்டுக்கல்லை சேர்ந்த சுவாதி 30 , கம்பத்தை சேர்ந்த தங்கம் 35 , முத்துச்செல்வம் 28 , ரேகா 27 , உத்தமபாளையத்தை சேர்ந்த சசி பிரபா 36 , தேனியை சேர்ந்த குமுதா 45 , புதுப்பட்டியை சேர்ந்த முத்துசெல்வன் என 6பேர் சிகிச்சையில் உள்ளனர். டாக்டர்கள் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இவர்கள் கூறுகையில்,' அதிகாலையில் மருத்துவமனைக்குள் நுழையும்போது முதலுதவி செய்ததோடு டாக்டர்கள் தங்களின் கடமை முடிந்துவிட்டதாக எண்ணிவிட்டனர்.
அடிபட்டவர்களில் சிலபேருக்கு காலில் தொடர்ந்து வலி உள்ளது.இதற்காக ஸ்கேன் எடுப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. நாங்கள் சத்தம்போட்ட பிறகு பிரச்னை என்னவென்று கேட்கிறார்கள் 'என்றனர். டாக்டர்கள் கூறுகையில், அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கும் வகையில் சிறந்த முறையிலே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

