/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரு புறம் குரங்குகள், தெருநாய்கள்; மறுபுறம் காட்டு மாடுகள்; 'கொடை ' 3வது வார்டில் அல்லாடும் மக்கள்
/
ஒரு புறம் குரங்குகள், தெருநாய்கள்; மறுபுறம் காட்டு மாடுகள்; 'கொடை ' 3வது வார்டில் அல்லாடும் மக்கள்
ஒரு புறம் குரங்குகள், தெருநாய்கள்; மறுபுறம் காட்டு மாடுகள்; 'கொடை ' 3வது வார்டில் அல்லாடும் மக்கள்
ஒரு புறம் குரங்குகள், தெருநாய்கள்; மறுபுறம் காட்டு மாடுகள்; 'கொடை ' 3வது வார்டில் அல்லாடும் மக்கள்
ADDED : மார் 01, 2024 06:24 AM

கொடைக்கானல் : குரங்குகள், தெருநாய்கள் தொல்லை, தெருவில் நடமாடும் காட்டுமாடால் அச்சுறுத்தல், தாழ்வாக செல்லும் மின்வயரால் விபத்து அபாயம், துார்வாரப்படாத சாக்கடை, பட்டா, வீட்டு வரி இல்லாத சூழல், சரிவர எரியாத தெருவிளக்குகள், அள்ளப்படாத குப்பை, குடிநீர் இணைப்புக்கு கூடுதல் பணம் வசூல், சேதமடைந்த ரோடு என கொடைக்கானல் நகராட்சி 3 வது வார்டில் ஏராளமான பிரச்னைகள் குவிந்துள்ளன.
கவுன்சிலர் வருவதே இல்லை
பாலகிருஷ்ணன், ஒயர்மேன் : குப்பை சரிவர அள்ளப்படுவதில்லை. சாக்கடை துார்வாராமல் தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. தெரு விளக்கு சரிவர எரியாமல் இரவில் தடுமாறும் நிலை உள்ளது. தற்போது அமைத்த கான்கிரீட் ரோடு சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ளன . இங்கு வசிக்கும் ஏராளமானவர்களுக்கு பட்டா இல்லை . வார்டிற்கு கவுன்சிலர் வருவதே இல்லை.
ஆக்கிரமிப்பில் மின்கம்பம்
தேவராஜ், பா.ஜ.. அமைப்பு சாரா தொழில், துணைத் தலைவர் : கீழ் புதுக்காடு பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுத்தும் அகற்றவில்லை. அவசர காலகட்டங்களில் நோயாளிகளை கொண்டு செல்ல இப்பகுதியில் வாகனங்கள் வரமுடியாத நிலை உள்ளது. குடிநீர் இணைப்புக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வசூலிக்கின்றனர். கீழ் புதுக்காடு பகுதியில் பாலத்தை சீரமைத்து மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அவதிப்படும் நிலை உள்ளது. குரங்குகள் தொல்லையால் குடியிருப்பு வாசிகள் அவதிபடுகிறோம்.
வாகனங்களால் இடையூறு
மகேந்திரன், ஹிந்து முன்னணி நகர செயலர்: தெரு நாய்கள் தொல்லையால் அச்சுறுத்தலுடன் செல்லும் நிலை உள்ளது. தெருவோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு , 108 உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்ஒயர்களால் விபத்து அபாயம் உள்ளது. வார்டில் நடமாடும் காட்டு மாடுகளால் அச்றுத்தல் உள்ளது.
வார்டில் அடிக்கடி விசிட்
ஜோதிமணி, கவுன்சிலர் (தி.மு.க.,) : ரூ. 80 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. குரங்குகளை பிடிக்க வனத்துறையிடம் கூறப்பட்டுள்ளது. மின்தடையை சீர் செய்ய புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது. வார்டில் சேதம் அடைந்துள்ள ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பட்டா இல்லாதவர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. இடையூறாக உள்ள மின்கம்பம், தாழ்வான மின் ஒயர்கள் மின்வாரியம் மூலம் சரி செய்யப்படும். வார்டிற்கு அடிக்கடி சென்று வருகிறேன் என்றார்.

