sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒரு புறம் கொசு, மறு புறம் நாய்கள்; திணறும் 10 வது வார்டு மக்கள்

/

ஒரு புறம் கொசு, மறு புறம் நாய்கள்; திணறும் 10 வது வார்டு மக்கள்

ஒரு புறம் கொசு, மறு புறம் நாய்கள்; திணறும் 10 வது வார்டு மக்கள்

ஒரு புறம் கொசு, மறு புறம் நாய்கள்; திணறும் 10 வது வார்டு மக்கள்


ADDED : மார் 17, 2024 01:14 AM

Google News

ADDED : மார் 17, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாக்கடைகளால் கழிவு நீர் தேங்க கொசுக்கள் உற்பத்தி, வீதியெங்கும் நாய்கள் தொல்லை, எரித்துவிடப்படும் குப்பையால் மாசுபாடு என்பன உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் 10 வது வார்டு மக்கள் .

திண்டுக்கல் - - பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் தெருக்கள் 1,2,3 , வடக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட இந்த வார்டில் சாக்கடை அடைப்புகளை சீரமைக்காததால் எந்நேரமும் கழிவு நீர் தேங்குகிறது. கொசு உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக எங்கும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுவதில்லை.

முதல் குறுக்கு சந்தின் கோயில் அருகே குப்பையை கொட்டுகின்றனர். இதனை முறையாக அள்ளாமல் எரித்தும் விடுகின்றனர் என்ற புகார் பிரதானமாக இருக்கறது. கோயில் முன்பு குப்பை கொட்டுவது பக்தர்களை முகம் சுழிக்க வைப்பதோடு அருகே உள்ள அங்கன்வாடி குழந்தைகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். குப்பையை எரிப்பதால் குழந்தைகள் மூச்சுவிட சிரமத்திற்கு உள்ளாகும் நிலையும் உள்ளது.

தெருக்களில் நாய்களும் சுற்றித்திரிகின்றன. அவை வீட்டிற்குள் செல்வதும் குழந்தைகளை கடிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட ஒரு சின்ன குழந்தையை நாய்கள் ஒன்று கூடி கடித்தது பெரும் பேசு பொருளானாது. தெருவிளக்கை எல்.இ.டி., விளக்காக மாற்றியதைத் தவிர வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை. போதிய வெளிச்சமின்மையின்மையால் இரவு நேரத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத சூழல் உள்ளது. போதிய சிசிடிவி கேமராக்கள் இல்லாததும் குற்றச்சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது.

சாக்கடையை சீரமையுங்க


சுரேகா, குடும்பத்தலைவி , செல்லாண்டியம்மன் கோயில் தெரு : மாதக்கணக்கில் சேதமான சாக்கடைகளால் நோய்தொற்று பரவுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு சாக்கடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். அவ்வப்போது துார்வார வேண்டும். சாக்கடையை வெளியே எடுத்து போட்டு விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் நோய் தொற்று சூழல் நிலவுகிறது.

பாதுகாப்பில்லாத சூழல்


செல்வகுமார், பா.ஜ., இளைஞரணி : இந்த வார்டு பாதுகாப்பில்லாத சூழலில் இருக்கிறது. மாலைக்குமேல் ஒதுக்குப்புறமான இடங்களில் சிறுவர்கள் வரை கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்குள்ளே அடித்துக் கொள்கின்றனர். பொதுமக்கள், பெண்கள் அச்சப்படுகின்றனர். அதோடு இப்பகுதியில் ரோடு போட்டே பல ஆண்டுகள் ஆகுவதால் சிதலமடைந்து காணப்படுகின்றன. குப்பை எரிப்பது காற்று மாசுவை ஏற்படுத்துவதோடு வயதானவர்கள், குழந்தைகளுக்கு மூச்சு பிரச்னையையும் ஏற்படுத்துகின்றன.

கொசு, நாய்கள் தொல்லை


நாகேந்திரன், செல்லாண்டியம்மன் கோயில் 2 வது தெரு : கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அச்சத்தோடு கடந்து வர வேண்டியதாக இருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேவையானதை செய்கிறோம்


பானுப்பரியா, கவுன்சிலர் ( தி.மு.க.,) கொசுமருந்துகள் தொடர்ந்து அடிக்கப்படுகின்றன. பொதுமக்கள் எவரேனும் ஒரு தகவல் அளித்தால் மறுநாளே அந்த பகுதிக்கு கொசுமருந்து அடிக்கப்படுகிறது. கடிக்கும் நாய்கள் பிடித்துச் செல்லப்பட்டு விட்டன. குறைகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us