/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஓணம் கொண்டாட்டம்
/
திண்டுக்கல்லில் ஓணம் கொண்டாட்டம்
ADDED : செப் 06, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மலையாள மக்களின் பாரம்பரிய விழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நாளான திருவோணம் நேற்று கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்லில் வசித்து வரும் கேரள மக்கள் அதிகாலை எழுந்து வீட்டு வாசலில் அத்தப்பூ கோல மிட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.
10 நாட்களாக வீட்டு வாசலில் மலர்களால் கோலமிட்டு வந்த நிலையில் நேற்று பவள மல்லி, தாமரை, வாடாமல்லி, டோரியா, சம்பங்கி உள்ளிட்ட 12 வகையான பூக்கள் கொண்டு அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
20 வகையான உணவு வகைகள் படைத்து அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து கொண்டாடினர்.