ADDED : மார் 15, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஜனவரியில் நிலக்கோட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அணைப்பட்டியில் கஞ்சா விற்ற உசிலம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த மகேந்திரன்,ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சாவை சில்லறை விற்பனை செய்தது மதுரை உசிலம்பட்டி தாலுகா நடுப்பட்டியை சேர்ந்த விவேக் என்பது தெரிந்தது. போலீசார் நேற்று விவேக்கை,கைது செய்து விசாரிக்கின்றனர்.

