ADDED : ஜூலை 29, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி தாலுகா கிருஷ்ணா புரம் பகுதியில் 2015 ல் நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பழநி கூடுதல் விரைவு நீதிமன்றம் தீர்ப் பளித்தது.
பழநி தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் குமரேசனை அதே பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி 23, சக்திவேல் 26, முருகேசன் 37, செந்தில் 30, ஆகிய நால்வரும் 2015 ஆகஸ்ட் 17 இரவு மது குடிக்க அழைத்தனர்.
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் வெட்டி கொலை செய்தனர்.
இதன் வழக்கு பழநி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
முத்துப்பாண்டிக்கு ஆயுள் ரூ. 15,000 அபராதம், சக்திவேல், முருகேசன், செந்தில் ஆகியோருக்கு தலா ரூ. 5000 அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி மலர் விழி தீர்ப்பளித்தார்.