/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தகராறில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலி: 6 பேர் கைது
/
தகராறில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலி: 6 பேர் கைது
தகராறில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலி: 6 பேர் கைது
தகராறில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலி: 6 பேர் கைது
ADDED : அக் 06, 2025 05:42 AM
நெய்க்காரப்பட்டி : பழநி அருகே விவசாய தொழிலாளி தகராறில் தாக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழநி, அருகே கரிக்காரன்புதூரைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி ரவிச்சந்திரன் 58, இவரது மகன் மதன்குமார் 38. இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சோனமுத்து 40, என்பவருக்கும் கடந்த செப் 28 ல் வீட்டின் முன், டூவீலர் நிறுத்துவது சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் ரவிச்சந்திரன் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழநி தாலுகா போலீசார் அன்றே சோனமுத்துவை கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்.4) இரவு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இதனால், தகராறு வழக்கை கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய சின்னத்தம்பி என்கிற செல்வகுமார் 52, அனுப்பு 18, மணி 20, யஸ்வந்த் 20, காளிதாஸ் 26 ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.