/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
/
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
ADDED : அக் 06, 2025 05:41 AM

திண்டுக்கல் : திண்டுக்கல், சவேரியார் பாளையத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 43வது வார்டுக்குட்பட்டது சவேரியார் பாளையம் நேருஜி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால், தனியாரிடம் குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரை ரோட்டில் காலி குடங்களுடன் ரோடு மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்த வார்டு கவுன்சிலர் விஜயா, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.