/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பஸ் மோதி ஒருவர் பலி; பெண்ணின் கால் முறிந்தது

ADDED : டிச 04, 2024 11:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோயில் முன்பாக இன்று (டிச.,4) காலை அரசு பஸ் ஒன்று பிரேக் பிடிக்காமல் சென்றுள்ளது. இதில் முன்னால் பைக்கில் சென்றுக்கொண்டிருந்த நந்தகுமார் என்பவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனாலும் கட்டுக்கடங்காமல் சென்ற பஸ், சாலையை கடக்க முயன்ற ஒரு பெண் மீதும் மோதி சிறிது தூரம் சென்று நின்றது. இதில் அப்பெண்ணின் இரு கால்களும் முறிந்தன. சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.