UPDATED : செப் 19, 2026 09:00 PM
ADDED : செப் 19, 2026 08:31 PM
செம்பட்டி:செம்பட்டி கட்டட தொழிலாளியை காரில் கடத்தி கொன்ற வழக்கில் 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் போலீசில் சிக்கினார்.
செம்பட்டி அருகே சீவல்சரகு கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சங்கிலிமுருகன் 38, ஆக.,29ல் நண்பர்கள் சிலருடன் மது அருந்திய பின் மாயமானார். செம்பட்டி போலீசில் புகார் அளித்த அவரது தம்பி முத்துப்பாண்டி, சங்கிலிமுருகனை கடத்திய 4 பேரை செப்.,14ல் சீவல்சரகு அருகே ஆதரவாளர்களுடன் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
அதே ஊரைச் சேர்ந்த பாக்கியசெல்வம் 43, முருகன், மருதுபாண்டி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ரங்கசாமி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக சங்கிலிமுருகனை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டதில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். காரை பறிமுதல் செய்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பாபுரம் சந்தானம் 43, நேற்று திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல் அருகே போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
