நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: கோவிலூர் ஊராட்சி செல்லக்குட்டியூர் ஜோதிடர் குப்புசாமி 40. கரூர் தான்தோன்றிமலை கோயிலில் தங்கி ஜோதிடம் பார்ப்பதற்காக, திண்டுக்கல் - கரூர் ரோட்டில், டி.கூடலூர் தனியார் மில் எதிரே டூவீலரில் சென்றுள்ளார்.
அப்போது, பின்னால் வந்த கரூர் தெற்கு வெள்ளியணை பள்ளசங்கனூரை சேர்ந்த பூபதி ஓட்டிவந்த ஆம்புலன்ஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

