sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி மலை மீது பசுமை போர்வையை உருவாக்கும் கோயில் நிர்வாகம் விதைப்பந்துகள் துாவுதல், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்

/

 பழநி மலை மீது பசுமை போர்வையை உருவாக்கும் கோயில் நிர்வாகம் விதைப்பந்துகள் துாவுதல், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்

 பழநி மலை மீது பசுமை போர்வையை உருவாக்கும் கோயில் நிர்வாகம் விதைப்பந்துகள் துாவுதல், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்

 பழநி மலை மீது பசுமை போர்வையை உருவாக்கும் கோயில் நிர்வாகம் விதைப்பந்துகள் துாவுதல், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்


ADDED : நவ 18, 2025 04:24 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி மலை மீது விதைப்பந்துகள், கிரி வீதியில் மரக்கன்றுகள் நட்டு, பனை விதைகள் தூவி பசுமையான சூழலை பழநி கோயில் நிர்வாகத்தினர் உருவாக்கி வருகின்றனர். ஒரு லட்சம் மரக்கன்றுகள் பழநி நகர முழுவதும் நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பழநியை பசுமையாக்கும் நோக்கில் நகர் மற்றும் மலைக்கோயிலைச் சுற்றிலும் கடம்பு, மகிழம், அரசு, ஆழம், வேம்பு, இலுப்பை, சரக்கொன்றை, எழிலைப்பாலை, நாகலிங்கம் மரம், நாவல், பாதாம், புங்கன் உள்ளிட்ட மரங்களின் கன்றுகளை நட்டு, தினமும் தண்ணீர் விட்டு கோயில் நிர்வாகம் பராமரித்து வருகிறது.

பசுமை போர் வையாக பழநிமலை சுப்பிரமணியன், அறங்காவலர் குழு தலைவர், பழநி கோயில்: கோயில் நிர்வாகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தில், தன்னார்வ அமைப்பு மூலம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. பழநி மலை மீது வீசப்பட்டது.

வீ சப்பட்ட விதைப்பந்துகள் மரமாக விளைந்து பசுமை போர்வையாக பழநி மலை மீது இருக்கும். 6,000 விதைப்பந்துகள் துவப்பட்டுள்ளன. மேலும் பல ஆயிரக்கணக்கான விதைப்பந்துகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

ந கரை சுற்றிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் தேவையான மரக்கன்றுகள், உபகரணங்கள் வழங்குகின்றனர். பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த இரண்டு நந்தவனங்களை புதுப்பித்து மரக்கன்றுகளை நட்டு பசுமையாக்கி வருகிறோம். தொடர்ந்து, நகரில் நெகிழி இல்லாத பகுதியாக மாற்ற செயல்பட உள்ளோம்.

விதைப்பந்துகள் துவல் பாக்கியராஜ், உதவி பேராசிரியர், பழநியாண்டவர் கலை கல்லூரி, பழநி: 14வது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் சமூகநல பணிகள் செய்யப்பட்டன. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உத்தரவின் பேரில் 20 பள்ளிகள் 15 கல்லூரிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 500 என்.சி.சி., மாணவர்கள் அதிகாரிகள், பழநி மலை மீது ஆயிரக்கணக்கான விதைப்பந்துகளை தூவினர்.

மேலும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் நடத்தப் பட்டது. இடும்பன் மலைப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப் படுத்தினர்.






      Dinamalar
      Follow us