ADDED : ஜன 01, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாசிலாமணி புரத்தை சேர்ந்தவர் நாகராஜன்.
இவர் 2011ல் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான ரூ.1.47 லட்சம் மதிப்பிலான தண்டவாள இரும்பு பொருட்களை திருடினார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்பின் ஜாமினில் வெளிவந்த நாகராஜன்,மீண்டும் நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக ஆஜராகாமல் தலைமறைவானார் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜனை,பிடிக்க பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில் நாகராஜனை,பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி ஓசூர் பகுதியில் சுற்றித்திரிந்த நாகராஜனை,நேற்று போலீசார் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்தனர்.