/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடைக்குள் புகுந்த பஸ் ஒருவர் பலி, இருவர் காயம்
/
கடைக்குள் புகுந்த பஸ் ஒருவர் பலி, இருவர் காயம்
ADDED : ஜன 18, 2024 06:22 AM

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பூசாரிப்பட்டி பிரிவு அருகே வந்த அரசு பஸ் கடைக்குள் புகுந்ததில் அங்கிருந்த ஒருவர் பலியானார்.இருவர் காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து பெரியகுளத்திற்கு சென்ற அரசு பஸ் பூசாரிப்பட்டி பிரிவு அருகே வந்த போது குரும்பபட்டி ரோட்டில் இருந்து கார் ஒன்று மெயின் ரோட்டில் திரும்பியது. கார் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ் டிரைவர் வலது பக்கமாக செலுத்திய போது எதிரில் இருந்த கடைக்குள் புகுந்தது. கடைக்குள் அமர்ந்திருந்த குரும்பபட்டியை சேர்ந்த பிச்சையன் 65 , காயமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெங்கடாஸ்திரிகோட்டையைச் சேர்ந்த காசி 43, மல்லணம்பட்டியை சேர்ந்த ராஜா 63, சிகிச்சை பெறுகின்றனர். பஸ்சில் வந்த பயணிகளை வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் மீட்டனர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.