/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் ஒன்வே பயணம்
/
ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் ஒன்வே பயணம்
ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் ஒன்வே பயணம்
ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் ஒன்வே பயணம்
ADDED : நவ 23, 2025 03:10 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் விதிமுறைகளுக்கு மாறாக ஒன்வேயில் வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.
ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதி நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. குறிப்பாக காலை நேரத்தில் பல்வேறு பணிகளுக்காக வெளியூர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பள்ளி மாணவர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இதே போல் மாலை நேரத்திலும் இப்பகுதியில் நெரிசல் அதிகமாக உள்ளது. இங்கு அமைந்துள்ள பல்வேறு கடைகளுக்கு சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் திண்டுக்கல் ரோட்டில் இருந்து பிரிந்து வேடசந்தூருக்கு ஒரு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த ரோடு தொடங்கும் இடத்தில் ரயில்வே மேம்பாலம் தொடங்குகிறது.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்துாருக்கு செல்லும் வாகனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இடது புறம் திரும்பிப் பயணிக்கின்றன. வேடசந்துார் வழித்தடத்தில் இருந்து
ஒட்டன்சத்திரம் வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் சென்று ஒட்டன்சத்திரம் ரோட்டிற்கு வர வேண்டும்.
ஆனால் பெரும்பாலான வாகனங்கள் விதிமுறைகளுக்கு மாறாக வேடசந்தூர் ரோட்டில் இருந்து வலது புறமாக ஒன் வேயில் பயணித்து ஒட்டன்சத்திரம் செய்கின்றன.
இதனால் செக்போஸ்ட் பகுதியில் எதிரெதிரே வாகனங்கள் பயணிக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. காலை , மாலை நேரங்களில் திண்டுக்கல் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது.
பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் வரை பின்னால் வரும் வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இத்துடன் ஒன்வேயில் இருசக்கர வாகனங்கள் வருவதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் விபத்துகளை குறைக்க ஒன்வே யணத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

