ADDED : மார் 20, 2025 02:22 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 3 மாதத்திற்கு முன் கிலோ ரூ.100க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போதுரூ.15க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காய பேட்டைக்கு திருப்பூர், நாமக்கல், மைசூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஒட்டன்சத்திரம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தினமும் 300 டன்னுக்கு மேல் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிருந்து வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர். சில நாட்களாக முதல் தர சின்ன வெங்காயம் ரூ.70க்கு விற்பனையானது. தற்போது வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் விலை சரிந்து முதல் தர சின்ன வெங்காயம் ரூ.35, 2ம் தரம் ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயமும் முதல் தரம் ரூ.25, 2ம் தரம் ரூ.18க்கு விற்பனையாகிறது.