/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து அதிகரிப்பு எதிரொலியாக சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
/
வரத்து அதிகரிப்பு எதிரொலியாக சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பு எதிரொலியாக சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பு எதிரொலியாக சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
ADDED : நவ 12, 2024 11:49 PM

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் அதன் விலை குறைந்து கிலோ ரூ.20க்கு விற்றநிலையில் 100 டன் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயப்பேட்டைக்கு கோவை, திருப்பூர்,நாமக்கல்,தேனி,தாராபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பெரிய ,சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. தினமும் 400 டன்னிற்கு அதிகமாக சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
இதன் உற்பத்தி தற்போது திண்டுக்கல் மட்டுமில்லாமல் பிறமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இதனால் 2 நாட்களாக திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை குறைந்து கிலோ ரூ.20க்கு விற்பனையானது. உற்பத்தி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உள்ளூர் சிறு வியாபாரிகளும் வாங்குவதற்கு தயக்கம் காட்டியநிலையில் சின்னவெங்காயம் 100 டன் அளவிற்கு வெங்காயப்பேட்டையில் தேக்கமடைந்துள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் அவைகள் நனையாமல் இருக்க கோடவுன்களில் பாதுகாக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவற்றை விற்க முடியாத மொத்த வியாபாரிகள் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் இதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒருவாரத்திற்கு முன் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்றது குறிப்பிடத்தக்கது.