/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடை, வணிக நிறுவன பதிவை ஆன்லைனில் மேற்கொள்ளுங்க
/
கடை, வணிக நிறுவன பதிவை ஆன்லைனில் மேற்கொள்ளுங்க
ADDED : அக் 02, 2024 07:04 AM
திண்டுக்கல் : கடைகள், வணிக நிறுவனங்களின் பதிவை ஆன்லைனில் மேற்கொள்ள தொழிலாளர் உதவி ஆணையர் மலர்கொடி தெரிவித்தார்.
மேலும் கூறியதாவது : புதிய சட்டத்திருத்தத்தின் படி 2024 ஜூலை 2க்கு பின் புதிதாக தொடங்கப்பட்ட கடைகள் , நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை https://labour.tn.gov.in ல் 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்கும் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவுச்சான்றிதழ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
24 மணி நேரத்தில் சான்றிதழ் வழங்காவிட்டால் பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருத்தப்படும். இதேபோல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி தற்போது இயங்கி கொண்டிருக்கும் கடைகள் , நிறுவனங்கள் எந்தவித பதிவுக் கட்டணமின்றி கடை விபரங்களை ஒரு வருடத்தில் இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டும் என்றார்.