ADDED : டிச 30, 2024 06:10 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஒக்கலிகர் பணிபுரிவோர், ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் பல ஆண்டுகளாக வாடகை கட்டடங்களில் இயங்கிய நிலையில், தற்போது பழைய கரூர் ரோடு, எம்.வி.எம். நகர் 'எப்' பிளாக் மெயின் ரோட்டில் ஒக்கலிகர் பவன் என்ற பெயரில் சொந்த கட்டடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா சங்க தலைவர் அக்ரி திருமலைசாமி தலைமையில் நடந்தது. கட்டட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், லோகநாதன், சக்திவேல், காமராஜ், ராஜாராம், வெங்கட்ராம், சுந்தரபாண்டியன், அக்ரி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆலப்பன் வரவேற்றார். கோயம்புத்துார் ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி கட்டடத்தை திறந்து வைத்தார். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி, பரமசிவம், ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கவிதாபார்த்திபன், தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் ஜனகரன், துணைத் தலைவர் தம்பு, பொருளாளர் பிரகாஷ், திண்டுக்கல் மாவட்ட ஒக்கலிகர் காப்பு இளைஞர் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.