ADDED : ஜன 25, 2024 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே ஆவிச்சிட்டி ஊராட்சி நடுவனுார் ஆதிதிராவிடர் காலனியில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திறந்து வைத்தார். ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர்கள் ஜெயபாலன், சுப்பிரமணி, ஒன்றிய ஜெ. பேரவை இணைச் செயலாளர் விஜயன்,
மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் சிறுகுடி தினேஷ் குமார், நிர்வாகிகள் சேக்ஒலி, விஜய வீரன் கலந்து கொண்டனர்.