/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெருமாள்கோவில்பட்டியில் அங்கன்வாடி திறப்பு
/
பெருமாள்கோவில்பட்டியில் அங்கன்வாடி திறப்பு
ADDED : பிப் 13, 2024 05:15 AM

கோபால்பட்டி :கோபால்பட்டி பெருமாள்கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது.
கோம்பைப்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி சிறுமலை மலைப்பகுதியில் உள்ளது. இந்த மலை கிராமத்தில் பல நுாறு குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இருப்பினும் இங்கு அங்கன்வாடி மையம் இல்லாததால் சிறுவர்கள் படிக்க வசதியின்றி தவித்து வந்தனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவில் மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் ஒன்றிய நிதியிலிருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இதை கோம்பைப்பட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி திறந்து வைத்தார். தி.மு.க., ஊராட்சி செயலாளர் கார்த்திகைசாமி, துணைத் தலைவர் ராசு முன்னிலை வகித்தனர்.
அங்கன்வாடி சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.