ADDED : ஜன 12, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை டீன் சுகந்திராஜகுமாரி திறந்து வைத்தார். கண்காணிப்பாளர் வீரமணி,துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு பங்கேற்றனர்.10 படுக்கைகள் கொண்ட இந்த பிரிவில் பிராணவாயு,செயற்கை சுவாச கருவி,நோயாளிகளுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோய்,இரைப்பை புற்றுநோய்,வாய் புற்றுநோய் உள்ளிட்ட நோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சையும் வழங்கப்படுகிறது.