ADDED : பிப் 18, 2024 01:26 AM

வடமதுரை: வடமதுரை ஒன்றியத்தில் பாடியூர் என்.பாரைப்பட்டி, குளத்துார் எரமநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, பாகாநத்தம் ஒத்தப்பட்டி, தென்னம்பட்டி கெச்சானிபட்டி, இந்திரா நகர், சிங்காரக்கோட்டை ஆகிய 7 இடங்களில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், சித்துவார்பட்டி ஸ்ரீரங்ககவுண்டனுார், குளத்துார் ஆர்.வி.எஸ்., கல்லுாரி எதிரில் என 2 பயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றின் திறப்பு விழா வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் நடந்தது. கரூர் எம்.பி.,ஜோதிமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சரவணக்குமார், ஒன்றிய கமிஷனர் முருகேசன், ஊராட்சி தலைவர்கள் சுகந்தி, சந்தோஷ்குமாரி, திரவியராஜ், கோமதி, சந்திரா, விநாயகன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஸ்ரீரங்கம்மாள், விஜயலட்சுமி, ராஜசேகர், பரமேஸ்வரி, மோகன், மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜீவானந்தம், ஆனந்திஅறிவுகண்ணன் பங்கேற்றனர்.