ADDED : மார் 05, 2026 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சி இரண்டாவது வார்டு, பெரியகலையம்புத்தூர் 14வது வார்டில் தலா ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை வகித்து கடைகளை திறந்து வைத்தார்.
இதுபோல் பழநி சிவகிரிபட்டி ஊராட்சி நேதாஜி நகரில் ரேஷன் கடை, பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை திறந்து வைக்கப் பட்டது.
தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

