ADDED : பிப் 19, 2024 05:07 AM

கொடைக்கானல்,: கொடைக்கானல் அண்ணா சாலையில் சாய் ஸ்வஸ்தியா நல வாழ்வு மைய திறப்பு விழா நடந்தது. சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் ,'' பாபா கனவானது தற்போது நனவாக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதி மக்களுக்கு தரமான கல்வி, மருத்துவமனை கொடுக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி சாய் ஆனந்த் நிலையத்தில் குருகுல கல்வி துவங்கப்பட்டது, இதில் தங்குமிடம், கல்வி, உணவு, உடை அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
சாய் ஸ்வஸ்தியா நலவாழ்வு மையத்தில் மேல்மலை, கீழ்மலை மக்களுக்கு பொது மருத்துவம் இலவசமாக அளிக்கப்படும். மேலும் திண்டுகல்லில் 60 படுக்கை அறைகள் கொண்ட இலவச மருத்துவமனை கட்டப்பட்டு ஒரிரு ஆண்டில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
கொடைக்கானல் சாய் ஸ்வஸ்தியா நலவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வருவோர்க்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் எவ்வித கட்டணமின்றி பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படும் '' என்றார்.
கொடைக்கானல் சாய் ஸ்வஸ்தியா உறுப்பினர்கள், சாய் அகிலன் முதுனஹள்ளி, சதிஷ், வழக்கறிஞர் ஆறுமுக வேலன் கலந்து கொண்டனர்.
கொடைக்கானலில் சாய் ஸ்வஸ்தியா நலவாழ்வு மையத்தை சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் திறந்து வைத்தார்.

