ADDED : ஜூன் 30, 2025 03:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் அருகே குட்டுப்பட்டியில் புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு விழா மற்றும் லிங்கவாடி,கோமனாம்பட்டி பகுதிகளில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடந்தது.
விழாவை காணொலி காட்சி மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பூமி பூஜைகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குட்டுப்பட்டியில் துணை சுகாதார நிலையத்தை முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சேக் சிக்கந்தர் பாட்சா, ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள், மருத்துவ துறை அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.