ADDED : ஜன 20, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் விரிவுபடுத்தபட்ட மகாமண்டபம், அன்னதான கூடம் திறப்பு விழா நடந்தது.
கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. மூலவர் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தலைமை நிர்வாகி மணிமாறன் செய்தனர்.