ADDED : ஏப் 08, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசுமருத்துவமனையில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பண்ணை பார்மசி கல்லுாரி இணைந்து அமைத்த மருந்து தகவல் மையம் திறக்கப்பட்டது.
மருத்துவக் கல்லுாரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார்.
மருத்துவ மேலாளர் டாக்டர் வீரமணி, துணை மேலாளர் டாக்டர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர்.
பண்ணை குழும நிறுவன தலைவர் பண்ணை கார்த்திகேயன், துணைத் தலைவர் பரத்ஸ்ரீநிவாஸ், நிர்வாக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் நிரஞ்சன், தலைமை செயல் அதிகாரி கோகுலகிருஷ்ணன், பண்ணை பார்மசி கல்லுாரி முதல்வர் கணேசன் கலந்து கொண்டனர்.

