/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
/
பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED : டிச 31, 2025 05:59 AM
திண்டுக்கல், டிச.31-
திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
தாடிக்கொம்பில் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருமஞ்சனம் அர்ச்சனைகள், உற்ஸவர் பல்லக்கில் வலம் வருதல் நடந்தன. பரமபத வாசலுக்கு பெருமாள் வந்து அடைந்ததும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என பக்தி கோஷங்கள் எழுப்பினர். திண்டுக்கல், வேடசந்துார் ,ஒட்டன்சத்திரம் என பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதுபோல் திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள் கோயில், எம்.வி.எம்.நகர் வெங்கடசலபதி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

