/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளிகள் இடையே லீக் கிரிக்கெட்
/
பள்ளிகள் இடையே லீக் கிரிக்கெட்
ADDED : டிச 31, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் பள்ளிகளுக்கிடையேயான லீக் கிரிக்கெட் போட்டி ஜனவரியில் நடைபெற உள்ளது. 30 ஓவர்கள் அடிப்படையில் நடைபெறும் இப்போட்டிக்கு ஜன.4 க்குள் அணியை முன்பதிவு செய்ய வேண்டும்.
பங்குபெறும் அணிகள் தங்களின் விளையாட்டு உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும்.
செயலாளர், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் 6வது கிராஸ், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல் என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். பங்குபெறும் பள்ளிகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. தொடர்புக்கு மேலாளர் மணிகண்டனை 96556 63945 எண்ணில் அணுகலாம்.

